ஏற்றப்பாட்டு
contents.html
about_the_book.html
preface.html
ஏற்றப்பாட்டுகள்
௳
சுப்பிரமணியர்பேரில்
கீர்த்தனங்கள்
சென்னை - சூளை
ஸ்ரீ 'பாரதி' அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்டது
1923
விருத்தம்.
எண்ணிலாச்செனனம் யெண்பத்துநான்கு
லெட்சமாய்ப் பகுத்துப்பூர்வ
புண்ணியவசத்தால் பொருவிலாமானிடப்
புருடராய் வடிவெடுத்திந்த
மண்ணினிற்பிறந்துன் மலரடிக்காளாய்
வந்திலாச்செனன மெச்சென்மம்
வெண்ணிலாவுமிழும் வேற்கரம்பிடித்த
மெய்யனே ஆறுமாமுகனே
தரு-இ-ம்-காம்போதி-ஆதிதாளம்.
பல்லவி.
ஆறுமுகாயென்னைக் காருங்காருமையா - நல்ல
அரவணிந்தோன் மகிழ் சரவணையிலுதித்த — ஆறு
அநுபல்லவி
வாருநற்சமையந்திருவள்ளிதெய்வானைசென்றிரு
வஞ்சியுடனேயென்னாளுந் தஞ்சை வடவாயில்வாழும்
சரணஙகள்
மண்டலத்திலுள்ளளவுந் தொண்டர்மனக்கோரிக்கை
மாதபூசம்நாளில் வந்துநிறைவேற்ற
கொண்டுவந்தகாவடியிலுண்டகனசக்கரைபாலை
குளிர அபிஷேகஞ்செய்து மலர் தூற்ற
அண்டர்தொழும்பாதா யென்றுதெண்டனிட்டு
முன்னேநின்ற அவரவர்நினைத்தயெண்ணம்
தவறாமல் முடிக்கும்வண்ணம் — ஆறு
நீட்டியகூர்வேலினாலே மாட்டியசூரனை வென்ற
நின்னுடையவல்லமையை யென்சொல்வோ
நாட்டிலுள்ள உன்னடியார் எட்டிலடங்குமோசொல்ல
நானதிலோரந்தரங்கபக்தனல்லவோ
கூட்டியெனையா தரித்து வோட்டிடுந்துயர்பிரித்து
குன்னமில்லாவரந்தந்து வன்னமயிலேறி தந்து — ஆறு
தாசர் தயாநீயென்று மாசில்லாமலுன்னைவேத
சாஸ்திரமனைத்து முறையிடுகிறதே
யீசனே கண் கண்டதெய்வங் காசினியில்நீயேஎன்றும்
யெல்லவர்க்குங்கண்ணில் நாணப்படுகிறதே
தேசிகனேநானுமுன்னை ஆசையோட்டுத்தயென்னை
திருவிழியால்நோக்கிக்கொஞ்சங் கிருபைவைத்தாள் நீயேதஞ்சம் — ஆறு
முத்துக்குமரேசாவென்று யெத்தனை விதம்வருந்தி
முரையிட்டாலுமக்குக் கேழ்க்கவுமில்லை
உத்தமனே உன்னை நம்பி இத்தனைநாள் கார்த்திருந்தும்
உன்னருள்பெறாமலின்னம்பட வோதொல்லை
சித்தமுற்றயென்விசாரம் பததம்வைத்து தீரின்னேரம்
செம்பினேன் வெங்கடறாவுசீஷன்
சுப்ரமண்யா வுந்தன் தாசன் — ஆறு
வேறு மெட்டு
விருத்தம்.
அலைகடற்றன்புனலள்ளியேகுளித்த
அகஸ்தியர் தனக் கருள்புரிந்தோய்
மலைக்குறவள்ளியை மணந்திடும்பொருட்டில்
வையத்துளெவர்களும்வியப்ப
சிலைக்கரவேடந்திகள் முடிவேந்தன்
செந்துசிற்றம்பிரானெனவும்
நிலைத்திடாவடிவம் நிமிஷத்திலெடுத்த
நின்மலர்செய்திடுங்கருணை
தரு-இ-ம்-ஆனந்தபைரவி-ஜம்பைதாளம்.
பல்லவி
கருணையின்னமும் வல்லையோகுகாயென்னைக்
காரக்கக்கடனுமில்லையோ.
அநுபல்லவி.
தருமலர்சோலைசூழுந் தஞ்சைவடக்குவாயில்
பெருமையாயமர்ந்தகெம்பீராசூரசம்மார — கரு
சரணங்கள்
ஐயா அண்டினேன்மெய்யா-யென்னை
யாதரித்தாளும்நீர்-முருகையா
வையகமறியவுன்மைந்தனென்றிருக்கச்
செய்யா தீர்என்மேல்மோடி சீலாகுணவடிவேலா — கரு
வந்தாள் வரந்தந்தாள் தருணம்
மரவேன்கனவிலும் வந்தாள்
இந்தச்சொல்லுறுதியென் றிருதயத்தில்நம்பும்
கந்தாயெந்தனையின்று காவாசிவயோகா — கரு
ஏதோயித்தனை வாதோயெளி
யேன்மீது மனமிரங்காதோ
வாதைநானடையவும் வர் மம்நீர் செய்யலாமோ
போதும்போதும்சா துவைபோகாதெய்வானை மோகா
காரமோகடுந்தூரமோ-யென்னைக்
காற்பது உமக்கொருபாரமோ
ஆறாதித்தேன்பாடி ஆனந்தபைரவியால்
பாருங்கிருபைகுருபரனே பன்னிருகரனே — கரு
ஏசல்
இராகம்-பியாகு-ஜம்பைதாளம்.
வாவாகுமரகுருபரனே -சுவாமி — வா
தேவாதிதனைக்காத்த செழுங்குணகரனே
திருவருள்பொழி துரந்தரனே துரந்தரனே
துரந்தரனே-சுவாமி — வாவா
ஜெனனமரணமின்றி திகழ்மோனவடிவே
செப்புநான்மறை கெட்டாமுடிவே கெட்டாமுடிவே
கெட்டாமுடிவே சுமாமி — வாவா
தஞ்சமென் றுனை நம்புந் தாசர்தயாநிதியே
தமியேனுக்குன் பாதங்கெதியே பா தங்கெதியே
பாதங்கெதியே-சுவாமி — வாவா
யாரோயென்றனைநீயும் அகத்திலெண்ணாதே
அடியேன்மேல்வாது பண்ணாதே பண்ணாதே
பண்ணாதே-சுவாமி — வாவா
மாதாபிதாகுரு தெய்வமும்நீயே
மைந்தன்மேல்கிருபை செய்வாயே-செய்வாயே
செய்வாயே-சுவாமி — வாவா
தாமதமினிசெய்தால் சகிப்பேனோயானே
சரணமடைந்தே னென்கோனே யென்கோனே
யென்கோனே-சுவாமி — வாவா
தாசனைக்கார்த்திட சமயமுமீதே
தாரும்வுன்னடியினையிப்போதே-யிப்போதே
யிப்போதே-சுவாமி — வாவா
வெங்கட்றாவுசீஷனுன் மேல்பதம்பாடி
வேண்டினேன்மிகவுங் கொண்டாடி கொண்டாடி
கொண்டாடி-சுவாமி
சுப்பிரமணியர் கீர்த்தனம் முற்றிற்று.